தகவல் தொழில்நுட்பத்தில் அலைபேசிகளின் பங்கு முக்கியமானது.
இப்போது நவீன ஸ்மார்ட்போன்களின் வருகை பலவிதமான சேவைகளை தொலைபேசிகளில் பயன்படுத்தும் படியாக உள்ளது.
இணையம், செயலிகள், விளையாட்டுகள் மற்றும் இதர பயன்பாடுகள் என இத்துறையில் மென்பொருளாக்கம் வளர்ந்திருக்கிறது. ஆப்பிள், மைக்ரோசாப்ட், கூகுள் போன்ற பெரிய ஜாம்பவான்களும் இத்துறையில் நுழைந்து தங்களுக்கென இத்துறையில் சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளனர்.
மாறி வரும் காலகட்டத்தில் சாதாரண போனிலிருந்து நவின ஸ்மார்ட் போன்களையே பலரும் விரும்புகின்றனர். இவைகளில் பயன்படுத்த மென்பொருள்கள், விளையாட்டுகள் போன்றவற்றை எங்கே தரவிறக்குவது?
இவர்களின் இணையதளத்தின் மூலம் கைத்தொலைபேசிக்கு தேவையான மேம்பட்ட மென்பொருள்களை இலவசமாகவும் சில கட்டணமாகவும் பெறமுடியும்.
1. Nokia OVI Store: இது நோக்கியா நிறுவனத்தின் இணையதளமாகும். நோக்கியா போனைப் பயன்படுத்துபவர்கள் இத்தளத்தின் மூலம் கைத்தொலைபேசிக்கு தேவையான எல்லாவற்றையும் பெறமுடியும்.
இதில் தரவிறக்கம் செய்ய நோக்கியா ஸ்டோர் கணக்கொன்றைத் தொடங்க வேண்டும். நீங்கள் நோக்கியா கைத்தொலைபேசியில் இருந்து கூட இத்தளத்தில் நுழைந்து தரவிறக்கம் செய்ய முடியும்.
2. Android Market: கூகுளின் மென்பொருளான ஆண்ட்ராய்டு போன்களைப் பயன்படுத்துவோர்கள் இத்தளத்தின் மூலம் இலவச மற்றும் கட்டண பயன்பாடுகளைத் தரவிறக்கலாம். இத்தளத்திலும் லட்சக்கணக்கான பயன்பாடுகள் உள்ளன.
பயன்பாட்டு வகைகளின் மூலம் எளிதாக தேர்வு செய்ய முடியும். மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளம் உள்ள டேப்ளட் பிசி போன்ற இதர கருவிகளுக்கும் தரவிறக்கிக் கொள்ளலாம். கவனிக்க வேண்டிய விடயம் நீங்கள் எந்த வெர்சன் பயன்படுத்துகிறிர்களோ அதற்கேற்ப தரவிறக்க வேண்டும். வெர்சன் மாறுபட்டால் சில பயன்பாடுகள் இயங்காது.
3. Microsoft Windows Mobile OS: மைக்ரோசாப்டின் இயங்குதளமான Windows Mobile OS கொண்ட போன்களைப் பயன்படுத்துபவர்கள் மைக்ரோசாப்டின் Mobile Market இணையதளத்திலிருந்து பயன்பாடுகளைத் தரவிறக்கலாம். இதனை PocketPC என்று சொல்கின்றனர்.
ஏனெனில் முழுதும் விண்டொஸ் இருக்கும் கணணியைப் போலவே செயல்படுகிறது. இதில் சில பயன்பாடுகளை நிறுவும் போது கணணியிலிருந்து தான் கைத்தொலைபேசியில் நிறுவ முடியும். சில மென்பொருள்களை கணணியில் நிறுவி கணணி வழியாக அமைப்புகளை மேற்கொள்ளலாம்.
4. Apple Store: ஆப்பிள் நிறுவனத் தயாரிப்புகளான ஐபோன் மற்றும் ஐபொட் பயன்படுத்துவர்கள் ஆப்பிளின் ஸ்டோர் இணையதளத்திலிருந்து பயன்பாடுகளை இலவசமாக தரவிறக்கிக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment