Thursday 25 August 2011

கூகுளின் இலவச மென்பொருட்களை ஒரே கிளிக்கில் டவுன்லோட் செய்ய


கூகுள் தளம் வாசகர்களுக்காக சில பயனுள்ள மென்பொருட்களை அளிக்கிறது. இந்த மென்பொருட்களை எவ்வாறு டவுன்லோட் செய்வது என பார்ப்போம். இந்த பட்டியலில் கூகுளின் மென்பெருட்கள் மட்டுமின்றி கூகுல் பரிந்துரை செய்யும் சில பயனுள்ள மென்பொருட்களும்(Firefox, Avast, Skype....) உள்ளன. இந்த மென்பொருட்களையும் நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம். இந்த Packல் 14 இலவச மென்பொருட்கள் உள்ளது. இதில் 6 மென்பொருட்கள் கூகிளின் மென்பொருட்களாகும். இதர மென்பொருட்கள் வேற்று நிறுவனங்களின் மென்பொருட்கள். விண்டோஸ் XP, Vista, 7 ஆகிய இயங்கு தளங்களில் இந்த மென்பொருளை நிறுவலாம். 
  • இந்த மென்பொருட்களை டவுன்லோட் செய்ய கீழே கொடுத்துள்ள லிங்கில் செல்லுங்கள். 
  • உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும் இதில் மென்பொருட்களின் பட்டியல் இருக்கும். 
  • அதில் உங்களுக்கு தேவையான உங்கள் கணினியில் இல்லாத மென்பொருட்களை டிக் செய்து கொள்ளுங்கள்.

  • தேவையானதை டிக் செய்து கீழே உள்ள டவுன்லோட் பட்டனை அழுத்தினால் போதும் நீங்கள் டிக் செய்த மென்பொருட்கள் உங்கள் கணினியில் டவுன்லோட் ஆகிவிடும். 
  • பின்பு இன்ஸ்டால் செய்து நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம். 
இதில் உள்ள மென்பொருட்கள் பற்றி ஒரு சிறிய முன்னோட்டம் கீழே பார்ப்போம்.

Google Chrome - இணையத்தில் உலவுவதர்க்காக கூகுள் உருவாக்கிய இணைய உலவி ஆகும். உலகளவில் அதிகம் உபயோகிக்கப்படும் உலவிகளில் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது. 

Google Earth - உலகின் எந்த இடத்தையும் எளிதாக சுற்றி பார்க்கலாம் அதுவும் நிஜத்தில் இருப்பது போல. மற்றும் இந்த தளத்தில் Hotels, tourist place, driving directories போன்ற வசதிகளும் உள்ளது. 

Google Apps - கூகுளின் சேவைகளான ஜிமெயில்,காலெண்டர் போன்ற சேவைகளை நம் கணினியில் பயன்படுத்து கூகுள் உருவாக்கிய மென்பொருளாகும்.

Google Toolbar for Internet Explorer - IE உலவியில் பயன்படுத்த கூகுள் உருவாக்கிய மென்பொருள். இதன் மூலம் தேவையில்லாத popups உருவாவதை தடுக்கலாம், இணைய படிவங்களை நிரப்ப Auto fill வசதியும் உள்ளது.

Spyware Doctor with Antivirus- கணினியில் உள்ள தீங்கிழைக்கும் Spyware, adware, trojans போன்றவற்றை நீக்கி கணினியை பாதுகாப்ப வைத்துக்கொள்ள.

Avast - கணினியை பாதுகாப்ப வைத்துக்கொள்ளும் இலவச ஆண்டி வைரஸ் மென்பொருளாகும்.

Immunet Protect Antivirus - கணினியை பாதுகாப்ப வைத்துக்கொள்ளும் இலவச ஆண்டி வைரஸ் மென்பொருளாகும்.

Google Desktop - கூகுளின் இன்னொரு பயனுள்ள மென்பொருள் நம்முடைய டெஸ்க்டாப் விண்டோவில் சைட்பாரில் கூகுளின் வசதிகளை உபயோகிக்கும் வசதி.

Google Picasa - நம்முடைய போட்டோக்களை எடிட் செய்யவும், நண்பர்களுடன் பகிரவும் கூகுள் உருவாக்கிய மென்பொருள்.

Adobe Reader - இது பெரும்பாலும் நம் அனைவரும் கணினியிலும் இருக்கும் ஒரு மென்பொருளாகும். PDF பைல்களை நம் கணினியில் பார்க்க அடோப் நிறுவனம் உருவாக்கிய மென்பொருளாகும்.

Mozilla Firefox - மிகப்பிரபலமான இணைய உலாவியாகும். கூகுள் க்ரோம் இந்த உலவியை பின்னுக்கு தள்ளி தான் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

Google Talk - நம் நண்பர்களுடன் அரட்டை அடிக்க

Skype- குறைந்த விலையில் தொலைபேசி அழைப்பு பண்ணலாம்.

Real Player  - வீடியோ ஆடியோ பைல்களை இயக்க உதவும் மீடியா பிளேயார்.

WebM for IE9 - IE உலவியில் இணைய வீடியோக்களை காண 

மென்பொருட்களை டவுன்லோட் செய்ய-  Google Pack
Download As PDF

No comments:

Post a Comment