Wednesday, 9 November 2011

அனானி ஹேக்கர்களை ஆதரிப்போம்..(We Support Anonymous Hackers)


பொதுவாக ஹேக்கர்கள் என்றாலே இனைய தொழில்நுட்பம் சார்ந்து இயங்குபவர்களுக்கு கொஞ்சம் அலர்ஜியாகத்தான் இருக்கும் ஆனால் இப்பொழுது கூடவே கூகுலின் பிளாக்கர் வசதியை பயன்படுத்துபவர்களுக்கும் கொஞ்சம் பயமும் இருக்கிறது காரணம் வலைப்பதிவுகளும் இப்போது தனிமனித துவேஷம் கொண்டு ஹேக்காவது அவ்வப்போது வலைத்தளங்களின் வழியாக அறிய முடிகிறது.

இப்பொழுது இனையத்தில் தேவையான ஒரு எச்சரிக்கையை அனானி ஹேக்கர்கள் வெளியிட்டு இருக்கிறார்கள். அதற்கு அவர்கள் வைத்திருக்கும் பெயர் ஆபரேஷன் டார்க்நெட் (Operation Darknet) அவர்களுடைய கோரிக்கை குழந்தைகளை பலிகடாவாக்கி கொழிக்கும் குழந்தைகள் சம்பந்தபட்ட பாலியல் (Child Pornography) தளங்களை முடக்குவோம் என்பது தான் அவர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை.



குழந்தைகள் சம்பந்தபட்ட பாலியல் (Child Pornography) தளங்களை நடத்தும் உரிமையாளர்கள் அவர்களுக்கான வழங்கிகள் என அவர்கள் கண்டறியும் அனைத்து தளங்களையும், இனைய வழங்கிகளையும் முடக்க இருக்கிறார்கள் இதுவரை பல தளங்களை முடக்கியும் இருக்கிறார்கள் மேலும் அவர்களின் கொள்கைகள் மற்றும் டார்க்கெட் என்னவெண்பதை மிக தெளிவாக Anonymous Hackersதளத்தில் சொல்லியிருக்கிறார்கள் இவர்கள் சாதரணமானவர்கள் இல்லை என்பதற்க்கு இவர்கள் வெளியிட்ட எச்சரிக்கையை பார்த்தவுடன் சில தளங்கள் முகவரிகளையும் லிங்குகளையும் மாற்றியிருக்கிறார்கள் என்பதே இவர்கள் திறமைக்கு சிறந்த உதாரணம்.

ஆபரேஷன் டார்க்நெட் (Operation DarkNet)


அனானி ஹேக்கர்களின் (Anonymous Hackers) கைவரிசையில் சோனி நிறுவணம் (Sony Corporation) மற்றும் நியுயார்க் ஸ்டாக் எக்ஞ்சேஞ் (New york Stock Exchage) இரண்டும் பட்ட கஷ்டங்கள் அவர்களுக்கு தான் தெரியும் அதிலும் சோனி நிறுவணம் தான் அதிகமான சேதாரங்களை சந்தித்திருக்க வேண்டும். அனானி ஹேக்கர்கள் சோனி நிறுவணத்துக்கு எதிராக வெளியிட்ட அறிவிப்பை படித்து பாருங்கள் Anonymous wrote to Sony Corporation ஒரு கட்டத்தில் சமாளிக்க முடியாமல் சோனி நிறுவண சேர்மேன் Sony Board of Director யுஎஸ் அரசுக்கு எட்டு பக்கங்கள் கொண்ட கடிதம் எழுதியிருக்கிறார் அந்த கடிதத்தை Sony Chairman Letter to the US Govt. படித்து பாருஙகள் ஒரு கட்டத்தில் புலம்பியிருக்கிறார் நாங்கள் என்னதான் பாதுகாப்பு நடவடிக்க எடுத்து ஒரு ஆபத்தில் இருந்து தப்பித்தாலும் அடுத்த சில மணி நேரங்களிலேயே அடுத்து புதுவிதமான தாக்குதலை தொடர்கின்றனர் என்பதாக நீண்ட கடிதமாக இருக்கிறது.

கிட்டத்தட்ட இதுவரை 100ஜிபி அளவிலான குழந்தைகள் சம்பந்தபட்ட பாலியல் (Child Pornography)தள தகவல்களை எடுத்து அழித்திருக்கிறார்கள் இனியும் தொடரும் இதை முற்றிலுமாக ஒழித்தால் நமக்கும் சந்தோஷம் இன்றைய குழந்தைகள் நாளைய நம் எதிர்காலம் நிச்சியமாய் அவர்கள் இதுபோன்ற பிரச்சினைகளில் இருந்து காக்கப்பட வேண்டும். மேலும் இவர்கள் குழந்தைகள் சம்பந்தபட்ட பாலியல் தளங்களின் நிர்வாகிகளுக்கு எச்சரிக்கையாக நீங்கள் யாராக வேண்டுமானலும் இருங்கள் உங்களை நாங்கள் கண்டுபிடிக்கிறோம் என்பதாக இருக்கிறது.

பொதுவாக ஹேக்கர்கள் என்றாலே பயம் வரும் ஆனால் அனானி ஹேக்கரிகள் மீது மரியாதையும் மதிப்பும் வருகிறது. அனானி ஹேக்கர்கள் குறித்து மேலும் தெரிந்துகொள்ள கூகுலில் சென்று Anonymous Hackers என்று தேடினால் போதும். 



மேலும் அனானி ஹேக்கர்கள் தங்களை பற்றி சொல்வது இப்படித்தான்...
• We are Anonymous.
• We are Legion.
• We do not forgive.
• We do not forget.
• Expect us.

இது ஒரு புறம் இருக்க பொழுதுபோக்கு தளங்களில் முதன்மையாக இருக்கும் முகப்புத்தக (Facebook) தளத்தையும் வருகிற நவம்பர் 5 ம் தேதி (Facebook will fall Nov 5, 2011) முடக்கப்படும் என்பதாக ஒரு யூடியுப் வீடியோ இருக்கிறது உண்மையை சொல்லப்போனால் இந்த பேஸ்புக்கால் சீரழிந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும் இதற்கு சமீபத்திய ஒரு உதாரணம் மகேஷ் என்பவரின் தற்கொலையும் அவர் செய்த கொலையும்.

ஆபரேஷன் பேஸ்புக் (Operation Facebook)


என்ன நண்பர்களே அனானிகளின் ஆபரேசன் டார்க்நெட் தேவையான ஒன்றே என்று நம்புகிறேன் இனையத்தில் வலம் வரும் போது குழந்தைகள் சம்பந்தபட்ட பாலியல் (Child Pornography) தளங்களை கண்டால் Anonymous Hackers களிடம் தெரியபடுத்தினால் போதும் மற்றதை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். 
Download As PDF

No comments:

Post a Comment