Monday 23 May 2011

காப்பு நகல் எடுப்பது நல்லது ?

 
கணணி பயன்படுத்தும் நம்மில் பலர் கணணியில் உள்ள தகவல்களை அல்லது முக்கியமான மென்பொருள்களை குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறையாவது காப்பு நகல் எடுப்பதே இல்லை.

இதனால் நீங்கள் திடீரென்று எதாவது பிரச்சினை என்று கணணியை முழுதும் Format செய்யும் போது உங்களுடைய மென்பொருள்கள் அல்லது தகவல்கள் திரும்பக்கிடைக்குமா என்று பார்த்தால் சந்தேகமே வரும்.
இதில் முக்கியமான விடயம் எதுவென்று பார்த்தால் பலர் அவர்கள் கணணியில் உள்ள வன்பொருட்களின் டிரைவர் கோப்புகள் அல்லது டிரைவர் கோப்புகள் உள்ளடக்கிய தாய்ப்பலகையின் நெகிழ்வட்டு(Motherboard CD) கூட இருக்காது.
கணணியின் இயங்குதளமும் மற்ற துணைநிலை சாதனங்கள்(சான்றாக விசைப்பலகை, மவுஸ், பிரிண்டர் போன்றவை) தொடர்பு கொள்ளுவதற்கும் குறிப்பிட்ட சாதனங்களை கட்டுப்படுத்துவதற்கும் இருக்கின்ற கோப்புகளே டிரைவர் கோப்புகள் எனப்படும். இவை இயங்குதளத்தால் வழங்கப்படும் அல்லது வன்பொருள் கருவிகளை தயாரிக்கிற நிறுவனங்களாலும் வழங்கப்படும்.
உதாரணமாக  Audio Drivers for Sound, VGA Drivers for Display, கிராபிக்ஸ். இவை கண்டிப்பாக உங்கள் கணணிக்கு தேவைப்படும். நீங்கள் புதிதாய் எதாவது ஒரு கருவியை கணணியுடன் இணைக்கப் போகிறீர்கள் என்றால் அதற்கான டிவைஸ் டிரைவர் கோப்புகள் கணணியில் பதியப்பட்டால் மட்டுமே அது ஒழுங்காக வேலை செய்யும்.
உதாரணமாக Barcode Reader, Double Driver. நீங்கள் புதிதாய் கணணி வாங்கினால் இந்த கோப்புகள் அடங்கிய மென்வட்டுகளும் கொடுக்கப்படும். இதை தொலைத்துவிட்டால் கிடைப்பது கடினம். அதனால் இந்த டிவைஸ் டிரைவர் கோப்புகளை அப்படியே பேக்கப் எடுத்துக்கொள்ள ஒரு எளிய மென்பொருள் உள்ளது. இதன் பெயர் Double Driver.
இந்த மென்பொருள் மூலம் ஒரு முறை அனைத்து டிவைஸ் டிரைவர்களையும் பேக்கப் எடுத்து விட்டால் போதும். எப்போது வேண்டுமானாலும் நீங்கள் இதைக்கொண்டு பழையவற்றை மீட்டுக்கொள்ளலாம்.
இந்த மென்பொருளின் மூலம் நிறுவப்பட்டுள்ள டிவைஸ் டிரைவர்களின் பெயர், பதிப்பு, திகதி, நிறுவனம் அறியலாம். மேலும் ஒரு கிளிக்கில் பேக்கப் மற்றும் ரீஸ்டோர் செய்யலாம்.
 
Download As PDF

No comments:

Post a Comment