நாம் இணையத்தை பயன்படுத்த நமக்கு உதவி புரிவது பிரவுசர்களாகும். நிறைய பிரவுசர்கள் இருந்தாலும் பெரும்பாலானவர்களால் உபயோகப்படுத்தப்படுவது பயர்பொக்ஸ் உலவியாகும்.
இதில் பயர்பொக்ஸ் பிரவுசர் இரண்டாவது மிகப்பெரிய பிரவுசராகும். முதலிடத்தில் இருப்பது IE ஆகும். விண்டோஸ் கணணி வாங்கும் போதே இந்த IE பிரவுசரை நிறுவி கொடுப்பதால் தான் இந்த உலவி முதல் இடத்தில் உள்ளது. இல்லை என்றால் பயர்பொக்ஸ் தான் முதலிடத்தில் இருக்கும்.
சென்ற மாதம் தான் பயர்பொக்ஸ் 4 வெளியிடப்பட்டு இணைய தரவிறக்கத்தில் சாதனை நிகழ்த்தியது. இதுவரை இந்த பயர்பொக்ஸ் 4 உலவியை 112,923,144 பேர் தரவிறக்கம் செய்து உள்ளனர்.
வெளியிட்ட குறைந்த நாட்களிலேயே அதிகமானவர்களால் தரவிறக்கம் செய்யப்பட்ட இந்த மென்பொருள் தற்போது மேலும் பல வசதிகளை மேம்படுத்தி தனது புதிய பதிப்பான பயர்பொக்ஸ் 5 வெளியிட்டுள்ளது. ஆனால் இது முதலில் சோதனை(Beta) ஓட்டமாகவே விடப்பட்டுள்ளது.
இதன் வசதிகள்:
1. Firefox: விண்டோஸ் 7 மற்றும் விஸ்டா உபயோகிப்பவர்கள் பயர்பொக்சின் பிரவுசரில் உள்ள பட்டன்கள் புதிய மற்றும் சிறந்த தோற்றத்தை காட்டுகிறது.
2. HSTS: இந்த பயர்பொக்ஸ் 5ல் HSTS Protocol உதவியுடன் நம் பிரவுசரில் பாதுகாப்பாக இணையத்தை பயன்படுத்தும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. இணைய திருடர்களிடமிருந்து நம் கணணி பாதுகாக்கப்படுகிறது.
3. Audio API: இணையத்தில் இருக்கும் மீடியா கோப்புகளை கையாள புதிய வசதியை கொடுத்துள்ளது.
No comments:
Post a Comment