Monday 23 May 2011

தகவல்களை கொள்ளை அடிக்கும் கும்பலை அறிய ?

நாம் பயன்படுத்தும் பிரவுசரை தாக்கி நம் கணணியில் இருக்கும் தகவல்களை கொள்ளை அடிக்கும் வழக்கம் தற்போது வேகமாக பரவி வருகிறது.
சிறிய அளவில் சாதாரனமான ஸ்கிரிப்ட் மூலம் கூட தகவல்களை திருடுகின்றனர். சில நேரங்களில் நம் பிரவுசரில் இது போன்ற ஸ்கிரிப்ட் இருப்பது கூட நமக்குத் தெரியாது. இதற்கு தீர்வாக புதிய இணையதளம் அறிமுகமாகியிருக்கிறது.

ஓன்லைன் மூலம் நம் பிரவுசரை எளிதாக சோதித்து பாதிப்பு ஏதும் இருக்கிறதா என்று எளிதாக அறியலாம். இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பொக்ஸ், ஓப்பரா போன்ற பிரவுசர்களில் ஏதேனும் பாதிப்பு இருக்கிறதா என்பதை ஓன்லைன் மூலம் சோதித்து சில நிமிடங்களில் தெரிந்து கொள்ளலாம்.
கீழே குறிப்பிட்ட தளத்திற்குச் சென்று Start the test என்ற பட்டனை அழுத்தி நம் பிரவுசரை சோதிக்கலாம். சில நிமிடங்களில் நம் பிரவுசர் பாதிக்கப்பட்டுள்ளதா, இல்லையா என்ற தகவல்களையும் கொடுக்கிறது. அனைத்து தரப்பு மக்களும் பிரவுசரை அடிக்கடி சோதித்துக் கொள்வதால் பாதிப்புகளை தவிர்க்கலாம்.
 
Download As PDF

No comments:

Post a Comment