Monday, 23 May 2011

சொந்தமாக இணையதளம் அமைக்க‌


 சொந்தமாக இணையதளம் அமைப்பதை ஏதோ தொழிநுட்பம் என்று நினத்துக் கொண்டிருந்தால் மாற்றிக் கொள்ளுங்கள். இனி நீங்களே கூட சொந்தமாக இணையதள‌த்தை வடிவமைத்துக் கொள்ளலாம்.

இத‌ற்காக‌ எந்தவொரு புரோகிராமிங்கும் தெரிய வேண்டும் என்ற அவ‌சிய‌ம் இல்லை. இணைய‌த‌ள‌ம் உருவாக்க‌ வேண்டும் என்ற‌ ஆர்வ‌ம் இருந்தால் போதும். ம‌ற்ற‌தை இந்த இணைய‌த‌ளம் பார்த்துக் கொள்கிற‌து.
இணையத்தில் உலாவினால் மட்டும் போதுமா அதில் பங்கேற்க வேண்டாமா என்று கேட்கும் இந்த இணையதளம் நீங்களே சொந்தமாக இணையதளம் வடிவமைத்துக் கொள்ள உதவி செய்கிறது.
சொந்தமாக இணையதளத்தை வடிவமைத்துக் கொள்ள தேவைப்படும் எந்த விதமான தொழில்நுட்ப சுமையும் இல்லாமலேயே சுலபமாக இணையதளத்தை உருவாக்கி கொள்ள வ‌ழி செய்கிற‌து.
நீங்க‌ள் விரும்பும் எந்த‌ வ‌கையான‌ இணைய‌த‌ள‌த்தையும் வ‌டிவ‌மைத்துக் கொள்ள‌ தேவையான அனைத்து அம்ச‌ங்க‌ளும் உள்ள‌ட‌க்கிய‌ சேவையை இது வ‌ழ‌ங்குகிற‌து. ஒரு சில‌ கிளிக்குக‌ளில் மிக‌ச்சுல‌ப‌மாக இணைய‌த‌ள‌த்தை வ‌டிவ‌மைத்து விட‌லாம் என்று இந்த‌ த‌ள‌ம் உறுதி அளிப்ப‌து போல‌வே மூன்றே க‌ட்ட‌ங்க‌ளில் உங்களுக்கான‌ இணைய‌த‌ள‌த்தை உருவாக்கி கொண்டு விட‌லாம்.
ம‌ற்ற‌ சேவைக‌ளைப் போல‌ விள‌ம்ப‌ர‌ங்க‌ளால் த‌ளத்தை போட்டு நிர‌ப்புவ‌தில்லை என்று கூறுவ‌தோடு விரும்பும் முக‌வ‌ரியை ப‌ய‌ன்ப‌டுத்தும் வ‌ச‌தியையும் த‌ருவ‌தாக‌ தெரிவிக்கிற‌து.
சொந்தமாக இணையதள‌ம் அமைக்க‌ இங்கே கிளிக் செய்யவும்.
Download As PDF

No comments:

Post a Comment