தேடலுக்கான தளம் என்றால் நம் நினைவில் முதலில் நிற்பது கூகுள் தேடுதளம் மட்டுமே.
ஆனால் அறிவியல் தகவல்கள் தேடுவதற்கு மட்டும் என ஓர் தளம், கூகுள் தேடல் தளத்தைக் காட்டிலும் முன்னணி இடம் பெற்று இயங்குகிறது.
இதன் பெயர் சைரஸ். இந்த தேடுதல் தளம் கொண்டுள்ள முகப்புப் பக்கத்தில் ஏறத்தாழ 41 கோடி தளங்கள் உள்ளன. தேடும் போது முக்கிய சொல், தலைப்பு அல்லது அறிவியல் கலைச் சொல் என ஏதேனும் ஒன்றைத் தரலாம். அந்த தலைப்பு அல்லது சொல் குறித்த தளங்கள் மட்டுமின்றி பல முக்கிய கட்டுரைகளையும் இந்த தளம் சுட்டிக் காட்டுகிறது.
இதனுடைய ஒரு சிறப்பம்சம் என்னவெனில் அறிவியல் அல்லாத மற்ற தளங்களை இந்த தேடல் தளமே ஒதுக்கிவிடுகிறது. எனவே தொடர்பு இல்லாத மற்ற தளங்களின் லிங்க் மீது கிளிக் செய்து அவற்றைத் தேவையின்றி இறக்கி நேரத்தை வீணடிக்கும் வேலை இங்கு எழாது.
இந்த தளம் சுட்டிக் காட்டும் தளங்கள் அனைத்தும் அறிவியல் சார்ந்த, தொழில் நுட்பம் அல்லது மருத்துவம் சார்ந்த தகவல்கள் உள்ள தளங்களாக இருக்கும்.
அண்மைக் காலத்தில் அந்த அறிவியல் பிரிவில் வெளியான அறிக்கைகள், வல்லுநர்களின் கட்டுரைகள், காப்புரிமை பெற்ற தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள், ஆய்வுக் கட்டுரைகளைத் தாங்கி வரும் ஆய்வு இதழ்கள் ஆகியவற்றைக் காட்டும் இணைய தளங்களுக்கான தொடர்புகளாக இருக்கும்.
ஆய்வு மேற்கொள்பவர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கான தனிப்பட்ட தகவல்களைக் காட்டும் தளங்களாக இருக்கும். தொடர்ந்து பல ஆண்டுகளாக அறிவியல் தேடல்களுக்கான இணைய தளத்திற்கான விருதை இந்த தளம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த தளத்தின் மூலம் குறிப்பிட்ட பொருள் குறித்த தேடல் மட்டுமின்றி கட்டுரை எழுதியோர், கட்டுரைத் தலைப்பு, அதனை வெளியிட்ட ஆய்வு இதழ் ஆகியவற்றின் அடிப்படையிலும் தேடலாம். நாட்கள் அடிப்படையிலும் தேடலை மேற்கொள்ளலாம்.
No comments:
Post a Comment