மின்னஞ்சல் என்பது கணிப்பொறித்துறையில் உள்ளவர்கள் என்றில்லாது அனைவரும் பயன்படுத்தும் ஒரு தகவல் பரிமாற்ற சாதனம்.
ஒரு சிலர் தனக்கு ஏதாவது மின்னஞ்சல் வந்துள்ளதா என்று அடிக்கடி பார்க்கும் அளவிற்கு அதில் மிக போதையானவர்கள். தற்போது பல நிறுவனங்களும் சேமிப்பு அளவை அதிகளவில் கொடுத்து இருப்பதால் தங்கள் முக்கிய தகவல்களை கூட அதில் சேமித்து வைத்துக்கொள்கிறார்கள்.
தாங்கள் எங்கே சென்றாலும் தங்கள் தகவலை எடுத்துக்கொள்ள முடியும் என்பதால் ஒன்றுக்கு இரண்டாகவும் அதற்க்கு மேலும் உருவாக்கி வைத்துக்கொள்கிறார்கள், அந்த அளவிற்கு அதன் பயன்பாடு உள்ளது.
இந்த இடுகையில் ஜிமெயில் பற்றிய தகவல்களை கூறுகிறேன்
மின்னஞ்சலின் பயன்பாடு அதிகரிக்கும் வேளையில் அதன் முக்கியத்துவமும் அதிகரிக்கிறது. அதுவும் பதிவர்கள் பலர் தங்கள் தளத்திற்கும் இதே ஐ டியை பயன்படுத்துவதால் இதன் முக்கியத்துவம் இன்னும் வலுப்பெறுகிறது.
தற்போது ஹேக்கிங் (Hack) என்பது சர்வசாதாரணமாக நடைபெறுகிறது, கொஞ்சம் ஏமாந்தாலும் நாம் ஆசை ஆசையாய் வைத்து இருந்த, நீண்ட நாட்களாக பயன்படுத்தி வந்த முகவரி உட்பட பல தகவல்களை இழக்க நேரலாம். இதற்கு உதாரணமாக நமது பதிவர்கள் பலரை குறிப்பிடலாம்.
இதில் நமது மின்னஞ்சல் ஹேக்கிங் செய்யப்பட்டால் அதை எப்படி திரும்ப பெறுவது என்று கூறுகிறேன். ஹேக்கிங் செய்யப்பட்டால் 100% திரும்ப பெற முடியும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை, ஆனால் முடியாதது இல்லை முயற்சி செய்யலாம் என்று தான் கூகிள் கூறுகிறது.
ஐயோ! போச்சே என்று தலையில் கைய வைத்து உட்காராமல் அதை சரி செய்ய முடியுமா என்று பொறுமையாக யோசிப்பதே புத்திசாலித்தனம்.
பிரச்சனை வராமல் உஷாராக இருப்பது ஒரு வகை, அப்படி வந்து விட்டால் என்ன செய்வது அதற்கு சில முன்னேற்பாடுகளை செய்து விடுதல் இன்னும் நலம், அதை பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம்.
முதல் பிரச்சனை கடவுச்சொல் (Password) மறந்து விட்டால் என்ன செய்வது?
உங்களுடைய கூகிள் கணக்கில் My Account or Google mail –> settings –> Accounts and Import –> Google Account Settings உள்ளே சென்று படத்தில் உள்ள Change password recovery options ஐ சொடுக்குங்கள், உடன் உங்களை திரும்ப ஒரு முறை உங்கள் கடவுச்சொல்லை பதிய கூறும், உங்கள் கடவுச்சொல்லை பதிந்த பிறகு கீழே உள்ள படத்தில் உள்ள பக்கம் திறக்கும்
Email பகுதியில் நீங்க secondary mail இடத்தில் உங்களின் மற்ற ஒரு முகவரியை கொடுங்கள் (முக்கியமாக இரண்டு முகவரிக்கும் ஒரே கடவுச்சொல் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்)
SMS பகுதியில் உங்க கைத்தொலைபேசி எண்ணை கொடுக்கவும்
Security Question பகுதியில் உங்கள் விருப்ப கேள்வி பதிலை தேர்வு செய்யவும், மறந்து விட்டதாக நீங்கள் கருதினால் எப்போது வேண்டும் என்றாலும் மாற்றி அமைத்துக்கொள்ளலாம்.
இனி உங்கள் கடவுச்சொல் தொலைந்து (மறந்து) விட்டால் மேற்கண்ட முறைப்படி உங்கள் ஜிமெயில் கணக்கை மீண்டும் பெற முடியும்.
உங்கள் கடவுச்சொல் மறந்து விட்டு இதை பயன்படுத்தினால் உங்கள் secondary மின்னஞ்சலுக்கு உங்கள் கடவுச்சொல் அதிகபட்சம் 24 மணி நேரத்திற்குள் வரும், எனவே பதட்டத்தில் பலமுறை முயற்சி செய்ய வேண்டாம், இது நீங்கள் முயற்சிக்கும் போதே கூகிள் உங்களுக்கு அறிவுறுத்தும்.
இது வரை உங்கள் கடவுச்சொல் மறந்து விட்டால் எப்படி பெறுவது என்பதற்கான வழிமுறைகள் கண்டீர்கள், உங்கள் கடவுச்சொல் ஹேக்கிங் செய்யப்பட்டால்…
இது தான் பிரச்சனையானது
உங்கள் கடவுச்சொல்லை ஹேக் செய்பவர் முதலில் செய்வது உங்கள் பாதுகாப்பு தகவல்களை அழிப்பது தான், அதாவது உங்கள் secondary mail, SMS, Security Question ல் நீங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்து தகவல்களையும் நீக்கி இருப்பார்கள், இதனால் குட்டி கரணம் அடித்தாலும் உங்கள் மின்னஞ்சலை திரும்ப பெற முடியாது.
ஐயய்யோ! அப்புறம் என்னங்க பண்ணுறதுனு நீங்க பேதி ஆவது தெரியுது. இதற்க்கு கூகிள் உங்களுக்கு கொடுக்கும் கடைசி வஜ்ராயுதம் தான் இந்த லிங்க். இங்கே சென்று அவர்கள் கேட்கும் தகவல்களை கொடுங்கள்.
நீங்கள் தினமும் பயன்படுத்தும் கணிப்பொறி இடத்தில் இருந்தே கொடுங்கள் ஏன் என்றால் இதை நீங்கள் submit செய்யும் போது உங்கள் IP கூகிள் நிறுவனத்தாரால் ட்ராக் செய்யப்படும், எனவே ஒரே IP யாக இருப்பது உங்கள் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தும்.
நீங்கள் கூகிள் கணக்கு துவங்கியபோது உங்களுக்கு ஒரு Welcome மின்னஞ்சல் வந்து இருக்கும் அதையும் இந்த லிங்கில் சென்று கூகிள் என்னென்ன தகவல்கள் கேட்கிறது என்பதையும் அறிந்து அதை தொகுத்து பாதுகாப்பான இடத்துல சேமித்து வைத்துக்குங்க. எப்படியும் இரண்டு மின்னஞ்சல் வைத்து இருப்பீங்க, கண்டிப்பா இரண்டிற்கும் ஒரே கடவுச்சொல்லை வைக்க வேண்டாம். ஒரு மின்னஞ்சல் கடவுச்சொல் ஹேக் செய்யப்பட்டால் பிறகு அதில் உள்ள secondary மின்னஞ்சலும் ஹேக் செய்ய வசதியாக போய் விடும் (ஒரே கடவுச்சொல்லாக இருந்தால்).
உங்கள் மின்னஞ்சலை யாராவது பயன்படுத்துகிறார்களா! என்று உங்களுக்கு சந்தேகம் வந்தால் உங்கள் கூகிள் மின்னஞ்சல் கீழ் பகுதியில் Last account activity: * hours ago on this computer. Details என்ற ஒரு வரி இருக்கும் இதில் நீங்கள் Details தொடுப்பை சொடுக்கினால் அதில் நீங்கள் தினமும் பயன்படுத்தும் IP இருக்கும், மாறி இருந்து சந்தேகம் வந்தால் உங்கள் கடவுச்சொல் சம்பந்தமாக உள்ள அனைத்து தகவல்களையும் மாற்றி விடுங்கள்.
No comments:
Post a Comment