Wednesday, 13 July 2011

முகவரிகளை கண்டறிய - ஒரு தளம்

எவ்வளவோ இணையதளங்கள் இருப்பினும், ஒரிரு தளம் மட்டுமே பரவலாக தெரியும். குறிப்பாக Google, Yahoo போன்றவை, இந்த தளங்களை விட சிறப்பான தளங்கள் இருப்பினும் அவை வெளியே தெரிவதில்லை. இதுபோன்ற தளங்களின் ஒன்றுதான் Indiatrace.com இந்த தளத்தின் மூலம் நாம் பல்வேறு வித வசதிகளை பெற முடியும் உதாரணமாக மொபைல் நம்பர் Trace-ல் தொடங்கி  பின் கோடு, IP அட்ரஸ் வரை நீண்டுகொண்டே செல்கிறது இந்த தளத்தின் வசதி, மேலும் நாம் தேடும் பல முகவரிகளை இந்த ஒரே தளத்தில் இருந்தப்படியே பெற முடியும். வேறு வேறு தளத்திற்கு செல்ல வேண்டிய அவசியமில்லை.


தளத்தின் முகவரி: Indiatrace



இந்த தளத்தில் இருந்தப்டியே நாம் மொபைல் ட்ராகிங்கில் தொடங்கி ஐபி, லேன்ட்லைன், பின் கோடு, STD கோடு, SMS சென்டர் வரை பல முகவரிகளை நம்மால் பெற முடியும். இந்த தளத்தின் உதவியுடன் இந்தியாவின் எந்த ஒரு முகவரியையும் (போன், ஐபி) எளிதாக பெற முடியும்.ஆன்லைனில் இருந்தப்படியே நீங்கள் மற்றவர்களின்  முகவரிகளை பெற இந்த தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அனேகமான முகவரியை பெறாவிட்டாலும் ஒரளவிற்கு குறிப்பிட்ட அளவு நீங்கள் மற்றவர்களின் முகவரியை அறிந்து கொள்ள இந்ததளம் வழிவகை செய்கிறது.
Download As PDF

No comments:

Post a Comment