Monday 12 December 2011

Firefox-ஐ வேகமாக்குதல்


Firefox browser பொதுவாகவே வேகமாக இணையத்தளங்களை பதிவிறக்கம் செய்யும் ஆற்றவலுடையது. அதனை மேலும் குறிப்பிடத்தக்களவு வேகமாக இயங்கச் செய்யும் வழியொன்றைக் கண்டறிந்தேன். உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
Firefox இல் மறைத்து வைக்கப்பட்டுள்ள Menu ஐ தெரியப்படுத்திக் கொண்டால் இந்நிலையைச் சாத்தியமாக்கலாம்.

Firefox இன் Address bar இல், about:config என டைப் செய்து கொள்ளுங்கள்.
1.jpg
பின்னர் Enter key ஐ அழுத்துங்கள். அங்கே Firefox இன் மறைந்துள்ள Menu காட்சியாகத் தொடங்கும்.
அங்கே Network prefetch-next என்ற நிலையைக் கண்டு கொள்ளுங்கள். அதற்கு நேரே Value என்ற நிரலின் பெறுமானம் True என்றவாறு அமைந்து காணப்படும். அதன் மேலே Double click செய்வதன் மூலம் அதன் பெறுமதியை False என அமைத்துக் கொள்ளுங்கள்.
2.jpg
பின்னர், Firefox மூலம் இணையத்தை உலா வந்து பாருங்கள். நிச்சயமாக வேகமான இணைய அனுபவத்தை உணருவீர்கள்.

Download As PDF

No comments:

Post a Comment