Sunday 12 June 2011

உங்கள் கணினியை வேகமாகவும்,பாதுகாப்பாகவும் வைக்க முக்கியமான 3 இலவச மென்பொருள்கள்

நாம் இணையத்தில் உலாவரும் போது நம்மை அறியாமலே சில மால்வேர்கள் நம் கணினியில் புகுந்து கொண்டு கணினியின் வேகத்தை குறைப்பதோடு நாளடைவில் நம் கணினியை செயலியக்க செய்து விடுகிறது. மற்றும் நம் கணினியின் ரகசிய தகவல்களை மற்றவர்களுக்கு அனுப்பி விடுகிறது. நாம் இணையத்தில் இருந்து ஏதேனும் டவுன்லோட் செய்து சில தேவையில்லாத பைல்களும் நம் கணியில் சேமிக்க படுகிறது. இதனாலும் நம் கணினி பாதிக்க படுகிறது. நீங்கள் எந்த ஆன்டி வைரஸ் உபயோகித்தாலும் அதை ஏமாற்றி விட்டு இவைகள் நம் கணினியில் புகுந்து கொள்கின்றன. ஆகவே இந்த பைல்களை நம் கணினியில் இருந்து எப்படி நீக்குவது என்று இங்கு காண்போம்.


1.Advance System Care Free 3.7.3
இந்த அபாயமான பைல்களை நம் கணினியில் இருந்து முற்றிலும் நீக்க ஒரு அருமையான மென்பொருள் உள்ளது அதும் இலவசமாக. இந்த மென்பொருளில் நம்முடைய கணினியின் பிரச்சினைக்குரிய பைல்களை கண்டறிந்து முற்றிலுமாக நீக்கு கிறது. இந்த அருமையான மென்பொருள் இலவசமாக கிடைப்பது ஆச்சரியமே. இந்த மென்பொருளில் Spyware, malware, Junk files ஆகியவைகளை முற்றிலுமாக நம் கணினியில் இருந்து நீக்குகிறது. இந்த மென்பொருள் நாம் நீக்கும் பைல்கள் தானாகவே பேக்கப் எடுத்து வைத்து கொள்வதால் நமக்கு தேவைபட்டால் திரும்பவும் அதை நிறுவி கொள்ளலாம்.



மென்பொருளை டவுன்லோட் செய்ய 

2. Ccleaner v3.02
இந்த மென்பொருளை பற்றி உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும் ஏற்க்கனவே மூன்றுமுறை இந்த மென்பொருளை பற்றிய பதிவை இந்த தளத்திலேயே போட்டு இருக்கேன். நம்மில் பெரும்பாலானவர்கள் உபயோகிக்கும் மிகவும் பயனுள்ள மென்பொருள். நம்முடைய கணினியின் தேவையில்லாத பைல்களை நொடியில் கண்டறிந்து அனைத்தையும் நீக்கி விடும். உபயோகிப்பதற்கும் மிகவும் சுலபமான மென்பொருள் இது. இந்த மென்பொருளை பற்றி மேலும் அறிய  


இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய 

3. Wise Registry Cleaner Free 5.91
நம்முடைய கணினியில் சில மென்பொருட்களை நாம் நிறுவுவோம். பின்னர் இந்த மென்பொருளின் செயல்பாடு பிடிக்காமல் இதை நீக்கி விடுவோம். இப்படி நீக்கும் போது நம்முடைய கணினியில் உள்ள registryல் அந்த மென்பொருளின் பைல்கள் நீங்காமல் அப்படியே பதிந்து விடும். இதனால் நம் கணினியின் வேகம் மிகவும் பாதிக்க படுகிறது. இந்த பைல்களை நீக்க அருமையான இலவசமென்பொருள் தான் இந்த மென்பொருள். மேலே உள்ள இரண்டு மென்பொருளில் இந்த வசதி இருந்தாலும் யாரும் அந்த மென்பொருட்களை பயன்படுத்தி registry சுத்தம் செய்ய வேண்டாம். இதற்கென்று பிரத்யோகமாக தயாரிக்கப்பட்டுள்ள இத மென்பொருளை பயன்படுத்தவும். இந்த மென்பொருளை பற்றி மேலும் அறிய 
இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய 

Download As PDF

No comments:

Post a Comment