Thursday, 25 August 2011

கூகுளின் இலவச மென்பொருட்களை ஒரே கிளிக்கில் டவுன்லோட் செய்ய


கூகுள் தளம் வாசகர்களுக்காக சில பயனுள்ள மென்பொருட்களை அளிக்கிறது. இந்த மென்பொருட்களை எவ்வாறு டவுன்லோட் செய்வது என பார்ப்போம். இந்த பட்டியலில் கூகுளின் மென்பெருட்கள் மட்டுமின்றி கூகுல் பரிந்துரை செய்யும் சில பயனுள்ள மென்பொருட்களும்(Firefox, Avast, Skype....) உள்ளன. இந்த மென்பொருட்களையும் நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம். இந்த Packல் 14 இலவச மென்பொருட்கள் உள்ளது. இதில் 6 மென்பொருட்கள் கூகிளின் மென்பொருட்களாகும். இதர மென்பொருட்கள் வேற்று நிறுவனங்களின் மென்பொருட்கள். விண்டோஸ் XP, Vista, 7 ஆகிய இயங்கு தளங்களில் இந்த மென்பொருளை நிறுவலாம். 

Saturday, 13 August 2011

ஐகான்(Icon) பிரியர்கள் அசந்து போகும் அளவுக்கு அருமையான ஐகான்கள்

இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட ஐகான்களை தேடுவதற்கு வசதியாக பலவித
வகைப்பாடுகள் அடங்கிய புதிய ஐகான்கள்.
பிரபலமான ஐகான்கள், ஐகான் பிரம்மாக்கள். இப்படி ஐகான் பிரியர்கள் அசந்து போகும் அளவுக்கு அருமையான தேடியந்திரமாக ஐகான் ஆர்க்கேவ் இணையதளம் வசிகிக்கிறது.

அனைத்து பயன்பாடுகளையும் உள்ளடக்கிய மென்பொருள்

நம்முடைய கணணியை பயன்படுத்தும் போது பல்வேறு விதமான பிரச்சினைகள் எழக்கூடும்.
உதாரணமாக விண்டோஸ் சரியாக இயங்க மறுப்பது, முதன்மை பயனாளர் கடவுச்சொல் கோளாறு இதுபோன்று பல்வேறு பிரச்சினைகள் எழும்.

Wednesday, 10 August 2011

கூகுள் புத்தகங்களை தரவிறக்க உதவும் மென்பொருள் ?


கூகுள் வழங்கும் கூகுள் புக் சேவையில் தற்போது 3 மில்லியனுக்கும் அதிகமான புத்தகங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
கூகுள் புக்ஸ் சேவையிலிருந்து புத்தகங்களை PDF மற்றும் JPEG வடிவில் இலவசமாக தரவிறக்கம் செய்ய GOOGLE BOOK DOWNLOADER என்ற மென்பொருள் உதவுகிறது.

Tuesday, 2 August 2011

விக்கிலீக்ஸ் இரகசியம்

உலக போலீஸ்காரன் என்று அமெரிக்கா அழைக்கப்படுவது வழக்கம். காரணம், உலகளவில் பொருளாதார, யுத்த ஆதிக்கம் செலுத்துவதில் உச்சத்திலுள்ள நாடு. கடந்த ஆண்டுகளில் வியட் நாம், ஈராக், ஆப்கானிஸ்தான்  என பல நாடுகளின் மீது போர் தொடுத்து ஏராளமான  மக்களை கொன்றுள்ளது. அவைகளின் பொருளாதாரத்தையும் வாழ்வாதரங்களையும் இயற்கை வளங்களையும் கைப்பற்றியுள்ளது.   இலத்தீன் அமெரிக்க நாடுகள் ( தென் அமெரிக்க நாடுகள்), மேற்காசிய நாடுகள், கிழக்காசிய நாடுகள், பொதுவுடமை நாடுகள், ஆப்பிரிக்க  நாடுகள் என எந்த நாடும் அதன் ஆதிக்க அரசியலிலிருந்து தப்பியதில்லை. எதிர்த்து கேட்பதற்கு எந்த நாடும் தயாராகவும் இல்லை.

Monday, 1 August 2011

Denial of Service attack - (சேவை மறுப்புத் தாக்குதல்)

சேவை மறுப்புத் தாக்குதலை (Denial of Service attack) இணைய உலகில் இப்படித்தான் சொல்கிறார்கள். சுருக்கமாக DOS (டி.ஓ.எஸ்) என்றும் சொல்வதுண்டு. பெரும்பாலான இணையளங்கள் தங்களின் வாடிக்கையாளருக்கு தகவல்களை அளிப்பது, விசாரணைகளுக்கு பதில்கள் தருவது போன்ற சேவைகளுக்காக வடிவமைக்கப்படுகின்றன. ரயில்வே,வங்கி, ஆயுள் காப்பீடு, தனியார் நிறுவனங்கள், மருத்துவமனைகள் போன்ற நிறுவனங்களின் தளங்களை உதாரணமாகக் கொள்ளலாம். இத்தகைய தளங்களில் தங்களின் கைவரிசைகளைக் காட்டுவதன் மூலம், மற்றவர்கள் அந்தத் தளத்தை பயன்படுத்த இயலாமல் செய்வதை 'சேவை மறுப்பு தாக்குதல்' என வரையறுக்கலாம். சேவை மறுப்புத் தாக்குதலை எந்தத் தளத்திலும் செய்யலாம். 2000 ஆம் ஆண்டில் மிகச் சாதாரணமான டி.ஓ.எஸ் மென்பொருளை பயன்படுத்தி, அமேசான்(Amazon),இபே(Epay),யாஹூ(Yahoo), சி.என்.என்(CNN) போன்ற மிகப் பிரபலமான தளங்ளை பதினேழு வயதுச் சிறுவன் பதம் பார்த்தான்.